டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்ட்ரெஸ்ட் வரனும்ன்னா 2 சிஸ்டம் முறையை கொண்டு வாங்க.. ஐசிசிக்கு சாஸ்திரி ஆலோசனை

Ravi Shastri
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகையால் நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் அலுப்புத் தட்டுவதாக அமைந்தது. எனவே அதை காப்பாற்றுவதற்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக் கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து பெரும்பாலான அணிகள் டிராவுக்கு பதிலாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றன.

அதனால் தற்போது டெஸ்ட் போட்டிகள் மீண்டும் ரசிகர்களிடம் ஓரளவு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்போதும் டாப் அணிகளுடன் கத்துக்குட்டி அணிகள் மோதும் போட்டிகள் மிகவும் அலுப்புத் தட்டுவதாகவே அமைகிறது. எடுத்துக்காட்டாக இந்தியா – வங்கதேசம் மோதும் தொடரை சொல்லலாம். அதில் இந்தியா வலுவான அணியாக இருப்பதால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்துவது ரசிகர்களிடம் எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

ரவி சாஸ்திரியின் ஐடியா:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆர்வமானதாக மாற்றுவதற்கு மொத்தம் உள்ள 12 அணிகளையும் 2 பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வலுவான டாப் கிரிக்கெட் அணிகள் ஒரு பிரிவில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதே போல வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் மற்றொரு பிரிவில் இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்படி இரு பிரிவுகளாக பிரிக்கப்படும் அணிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் உண்மையான தரமும் ஆர்வமும் ஏற்படும் என்று ரவி சாஸ்திரி ஐசிசி’க்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி லண்டனில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களிடம் தரம் இல்லாத போது ரேட்டிங் குறைந்து விடும். அதை பார்க்க சில ரசிகர்கள் மட்டுமே இருப்பார்கள்”

- Advertisement -

“அது போன்ற அர்த்தமற்ற கிரிக்கெட்டே இந்த விளையாட்டு விரும்பும் கடைசியாக இருக்கிறது. உங்களிடம் 12 டெஸ்ட் அணிகள் இருக்கிறது. அதை 6 அல்லது 7 அணிகள் கொண்ட பிரிவாக மாற்றி புதிய சிஸ்டத்தை செய்ய வேண்டும். நீங்கள் 2 அடுக்குகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை தக்க வைக்க டாப் 6 அணிகள் மோதுவது அவசியம்”

இதையும் படிங்க: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கெளதம் கம்பீரை அறிவித்த ஜெய் ஷா.. எப்போது வரை நீடிப்பார்?

“அத்துடன் டி20 போன்ற இதர ஃபார்மட்டில் நீங்கள் போட்டிகளை அதிகரிக்கலாம்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்திய ஐசிசி அப்படியே புள்ளிப்பட்டியல் முறையையும் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. எனவே வருங்காலத்தில் ரவி சாஸ்திரி கூறுவது போல டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

Advertisement