கங்குலி சொன்னதை ஆஸி கிரிக்கெட் கேட்கவில்லை. கொஞ்சம் கேட்டிருக்கலாம் – விளாசிய ரவி சாஸ்திரி

Ravi

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடர் குறித்து முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை அளித்து வர தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்த தொடர் குறித்தும் தனிமைப்படுத்துதல் விதி குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வந்ததும் 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குவாரன்டைன் டைன் விதிகளை நிர்ணயித்தது. ஆனால் பி.சி.சி.ஐ யின் தலைவரான கங்குலி வீரர்களை 6 நாட்கள் வைத்தால் போதும் என்பது போல வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

Ind-lose

ஆனால் கங்குலியின் இந்த வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. அதனால் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் பட்டிருக்கின்றனர். மேலும் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் தனது குழந்தை பிறப்புக்காக இந்தியா செல்கிறார்.

- Advertisement -

ind

மீண்டும் அவர் அணியில் இணைய வேண்டும் என்றால் 14 நாட்கள் காத்திருக்க முடியாது ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் இருந்தால் இன்னும் சில போட்டிகளில் அவரால் விளையாடி இருக்க முடியும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.