தோனி நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது ஏன்..! ரவி சாஸ்திரி வெளியிட்ட உண்மை தகவல்..!

- Advertisement -

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் முடிவில் நடுவரிடம் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கியதால் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளார் என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
ms
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் உடை மாற்றும் அறைக்கு திரும்பினார். அப்போது தோனி நடக்குவர்களிடம் இருந்து பந்துகளை வாங்கியுள்ளார். தற்போது இதனை வைத்து தோனி விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விடுவார் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், தோனி கடந்த 2014 ஆம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு முன்னதான போட்டியில் நடுவர்களிடம் இருந்து ஸ்டம்ப்புகளை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் சில போட்டிகளிலேயே தனது ஓய்வை அறிவித்தார் தோனி. எனவே, இந்த சம்பவத்துடன் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டு தோனி கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஒய்வு பெறுவார் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான .ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்த அவர் “தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற பேச்சு உலவுவது முட்டாள்தனமானது. இப்போதைக்கு அவர் ஒய்வு பெரும் எண்ணம் அவருக்கு இல்லை.
RaviOutPut
தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை பெற்றதற்கு காரணம் இருக்கிறது. அந்த பந்தை இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணுக்கு காட்டி, பந்து எந்த அளவுக்கு தேந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கத்தான் அவர் எடுத்து வந்தார். அப்போதுதான் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளத்தின் தன்மையை அறியமுடியும். அதற்காக தான் தோனி நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கினார்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement