Worldcup : ராயுடுவுக்கு பதிலாக விஜய் ஷங்கரை குடிபோதையில் தேர்ந்தெடுத்த ரவி சாஸ்திரி – விவரம் இதோ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Ravi-shastri
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் ஷங்கர் இடப்பிடித்துள்ளார். ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜய் ஷங்கர் தேர்வானது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ராயுடு சரியாக விளையாடாததால் அணிக்கு விஜய் ஷங்கர் தேர்வானார். மேலும், விஜய் ஷங்கர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செய்யப்பட்டதால் அவர் அணியில் தேர்வானார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது விஜய் ஷங்கர் தேர்வானது குறித்து சர்ச்சையான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அது யாதெனில் விஜய் ஷங்கரின் விக்கிப்பீடியாவை கூகுளில் சர்ச் செய்து பார்க்கும்போது உலகக்கோப்பை இந்திய அணியில் விஜய ஷங்கரை ரவி சாஸ்திரி குடிபோதையில் இருந்தபோது தேர்வு செய்தார் என்று இருந்தது. அதனை படித்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். எனவே, ரவி சாஸ்திரி விஜய் ஷங்கரை குடிபோதையில் தேர்வு செய்தார் என்ற செய்தி தியாக பரவியது.

Ravi

விவரம் அறிந்து மீண்டும் கூகுளில் சர்ச் செய்து பார்க்கும்போது அதனை யாரோ தவறாக எடிட் செய்து வெளியிட்டதாகவும், அது போலியான செய்தி என்றும் தெரியவந்தது. அதனை அடுத்து தற்போது விஜய் ஷங்கரின் விக்கிபீடியா பக்கம் சரியாக இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement