கோலியின் எண்ணம் முழுவதும் இதை சாதிக்க வேண்டும் என்பது மட்டும்தான் – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. இந்த 2019 ஆம் ஆண்டில் ஏகப்பட்ட சாதனைகளை கோலி புதிதாக படைத்துள்ளார். மேலும் வரவிருக்கும் ஆண்டிலும் கோலியின் சாதனைகள் தொடரும் என்று நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.

Kohli-1

இந்நிலையில் அவருக்கு 2020 ஆம் ஆண்டும் சிறப்பான ஆண்டாக அமையும் என்று அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் கோலி குறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட் தான் கோலிக்கு மிக பிடிக்கும் அவர் அதை தான் மிகவும் நேசிக்கிறார். ஏனெனில் டெஸ்ட் வடிவமே கிரிக்கெட்டின் சிறந்த வடிவம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கும் ஆசையை கோலியிடம் அதிகம் பார்க்கிறேன். அதுவும் வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவிக்க அவர் விரும்புகிறார். இதுவரை 100% சரியான கேப்டனை நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு கேப்டனுக்கு பலமும் பலவீனமும் உண்டு. கோலி ஒரு சில விஷயத்தில் வலிமையாக உள்ளார். ஒருசில விஷயத்தில் பலவீனமாக உள்ளார். ஆனால் போட்டியின் முடிவு தான் முக்கியம்.

Kohli-3

கோலியின் திறமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்திய கிரிக்கெட்டில் இதுவரை கோலத்தில் சிறப்பாக செயல்படும் கேப்டனை நான் பார்த்ததே இல்லை. இதுவரை செய்த தவறுகளில் இருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் சிறப்பானது. அவருக்கு இந்த வருடமும் சிறப்பாக அமையும் என்று ரவிசாஸ்திரி பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -