இவரை விட ஃபிட்டான வீரர் இருந்தா காட்டுங்க பாப்போம். என்னை பொறுத்தவரை இவரே பெஸ்ட் – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi
- Advertisement -

இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்பதனால் இந்தியாவில் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது என்று கூறலாம். மேலும் பல மாதங்களாக தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இது நல்ல ஓய்வு காலம் என்றே தெரிகிறது.

Dravid

- Advertisement -

அனைத்து வீரர்களும் அவர்களது வீட்டில் தங்களது ஓய்வை கழித்து வருகிறார்கள். மேலும் ஐபிஎல் தொடரும் தள்ளிப் போய் உள்ளதால் அவர்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் பார்க்கத் துவங்கி அது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் ஸ்கை கிரிக்கெட் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் ரவி சாஸ்திரி பேசியதாவது : ஒரு அணிக்கு கேப்டன் தான் பாஸ் அதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. பயிற்சியாளர் வேலை என்பது வேறு. அணியின் வீரர்களுக்கு போதிய பயிற்சி கொடுத்து அவர்களுக்கு உத்வேகத்தையும் கொடுத்து பயமில்லாமல் கிரிக்கெட் விளையாட வைப்பது ஒரு பயிற்சியாளராக என்னுடைய பணி அந்த பணியை நான் சிறப்பாக செய்து வருகிறேன் என்று நினைக்கிறேன்.

Ravi

மேலும் அணிக்கு தலைமை தாங்கி விளையாடுபவர் மற்ற வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் அணியின் கேப்டன் கோலி சிறப்பாக செயல்படுகிறார். மேலும் விராட் கோலி குறித்து ரவிசாஸ்திரி பேசுகையில் : உடற்தகுதி மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் விராத் கோலிக்கு ஈடு இணை இந்திய அணியில் வேறு யாருமில்லை.

- Advertisement -

அவர் ஒருநாள் காலை எழுந்து என்னிடம் இந்த உலகிலேயே நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் கிரிக்கெட் வீரராக நான் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக என்னிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் இப்போது வரை உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் அனைத்தும் சரியாக கடைபிடித்து வருகிறார். அணியில் தொடர்ந்து ஓய்வின்றி ஆடிவரும் வீரர்களில் கோலி முக்கியமானவர்.

ravi koli 2

டெஸ்ட் கிரிக்கெட் தான் இந்திய அணியின் முக்கிய வடிவமாக பார்க்கப்படுகிறது .அதிலும் நம்முடைய தரமான கிரிக்கெட்டை நாம் இதுவரை வெளிப்படுத்தி வருகிறோம் என்று கூறினார். இந்த பத்து மாதங்களாக ஏராளமான கிரிக்கெட்டை இந்திய அணி விளையாடி உள்ளது. எனவே இதுஇந்த ஓய்வு இந்திய அணி வீரர்கள் புத்துணர்ச்சி அடைய கிடைத்திருக்கும் வாய்ப்பாக இருக்கும் என்றும் ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement