இன்னும் 3-4 வருஷத்துல கே.எல் ராகுல் இதை செய்வார்னு நம்புறேன்.. அவரோட ப்ரைம் பார்ம் இது – ரவி சாஸ்திரி பாராட்டு

Ravi Shastri and KL Rahul
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் கே.எல் ராகுல் அற்புதமான பார்மை வெளிப்படுத்தி அசத்தலாக ரன் குவித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 62 ரன்கள் சராசரியுடன் 375 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போதும், லார்ட்ஸ் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

இன்னும் 3-4 ஆண்டுகளில் கே.எல் ராகுல் நிறைய சதங்களை குவிப்பார் : ரவி சாஸ்திரி

கடந்த மாதம் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அவருக்கு பதிலாக தற்போது துவக்க வீரராக நிரந்தர இடத்தினை இந்திய டெஸ்ட் அணியில் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரந்தர இடமின்றி பேட்டிங் வரிசையில் மாற்றி மாற்றி களமிறக்கப்பட்டு வந்த அவருக்கு தற்போது நிலையான இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

எனவே இனி வருங்காலத்தில் அவர் பிரமாதமான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவார் என்று நம்பலாம். கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கே.எல் ராகுல் இதுவரை 61 போட்டியில் விளையாடி 107 இன்னிங்ஸ்களில் 10 சதம் மற்றும் 18 அரைசதம் என 35.3 ரன்கள் சராசரியுடன் 3632 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகத் திறமையான வீரராக பார்க்கப்படும் அவரது இந்த புள்ளி விவரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சுமாரானது தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதற்கு அடுத்து நிச்சயம் கே.எல் ராகுல் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தூணாக விளங்குவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் ஒரு திறமையான வீரர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற ஆட்டம் இதுவரை வெளிவரவில்லை என்ற பேச்சு இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் இனி அப்படி ஒரு பேச்சு வராது என்று நம்புகிறேன். ஏனெனில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் தனது ப்ரைம் பார்மில் பேட்டிங் செய்து வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள இந்த துவக்க வீரருக்கான இடத்தினை நிலையாக பிடித்துக் கொண்டு அடுத்த 3-4 ஆண்டுகளில் அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்கள் சராசரியை தொடுவார் என்று நம்புகிறேன் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இன்னும் 60 ரன்கள் போதும்.. சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – கே.எல் ராகுல்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது டெஸ்ட் போட்டிகளில் தனது கால் நகர்வுகளில் சில முன்னேற்றங்களை செய்துள்ள அவர் பந்துகளை மிகச் சரியாக பார்த்து அடிக்கிறார். டெக்னிக்கலாகவே அவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதனால் இன்னும் இந்த தொடரில் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன். அதுமட்டும் இன்றி அவருடைய ப்ரைம் ஃபார்மில் இருக்கும் அவர் இந்திய அணிக்காக இன்னும் பல்வேறு சதங்களை அடிக்கப்போகிறார் என்றும் ரவி சாஸ்திரி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement