
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயதான வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சீசனிலேயே அனைவரது கவனத்தை ஈர்த்திருந்தார். அதிலும் குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய அவர் அனைவரது மத்தயிலும் பாராட்டுகளை பெற்றார்.
ஐ.பி.எல் தொடரில் அசத்தியதோடு மட்டுமின்றி 19 வயதுக்கு உட்பட்டோர் இங்கிலாந்து அணிக்கெதிராக 78 பந்துகளில் 143 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 62 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். இப்படி இவரது ஆட்டம் நாளுக்கு நாள் அசத்தலாக இருந்து வருகிறது.
அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் விரைவில் இந்திய அணிக்காகவும் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கை பார்த்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் பேசியதை பற்றி ரவி சாஸ்திரி சில சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது : ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நான் வர்ணனை செய்ய அந்த மைதானத்திற்கு நேரில் சென்றிருந்தேன். அப்போது எனக்கு 4 ஓவர் முதல் வர்ணனை செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் ஒருசில ஓவர்கள் தான் வர்ணனை செய்வேன் என்று நினைத்தேன். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றொரு வர்ணனையாளர் வராததால் தொடர்ந்து 2 ஸ்டின்ட் வர்ணனை செய்தேன். அப்போது 9 ஆவது 10 ஆவது ஓவர்களின் போது வைபவ் சூர்யவன்ஷி சதமடித்துவிட்டார். அதிலும் குறிப்பாக இஷாந்த் சர்மா மற்றும் சிராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்களையே அவர் பொளந்து கட்டினார்.
இதையும் படிங்க : இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் 2027 வேர்ல்டுகப் சான்ஸ் உறுதி.. சிராஜிக்கு – கிடைத்திருக்கும் வாய்ப்பு
அவர் அடித்த சிக்ஸர்கள் எல்லாம் 10 இருக்கைகள் தள்ளி சென்று விழுந்தது. அதனை பார்த்த மேத்யூ ஹைடன் “இவரை பார்த்தால் 14 வயது வீரரை போன்றே இல்லை.. நான் நம்பமாட்டேன் என்று கூறினார்..” அந்த அளவிற்கு அவரது அதிரடி இருந்தது. பின்னர் நான் தான் அவரை இளைப்பற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தேன் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.