ரவி சாஸ்திரியிடமிருந்து பி.சி.சி.ஐ க்கு சென்ற கடிதம் – வெளியான பரபரப்பு தகவல்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ளே பதவி விலகியதை அடுத்து ரவி சாஸ்திரி தொடர்ந்து இந்திய அணிக்காக தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னரும் கேப்டன் விராத் கோலியின் பரிந்துரையின்பேரில் மீண்டும் தொடர்ந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

Shastri

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தான் இந்த உலகக் கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ரவிசாஸ்திரி பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் அவர் மீது ரசிகர்கள் அதிர்ப்தியில் உள்ளனர். அதேநேரம் தற்போது 19 வயதுக்குட்பட்டோர் அணியை பயிற்சி செய்து வந்த ராகுல் டிராவிட் இலங்கை சென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டதால் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

Shastri

இவ்வேளையில் தற்போது ரவி சாஸ்திரி தான் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்றும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவரோடு சேர்ந்து பீல்டிங் ஸ்ரீதர், பௌலிங் கோச் பரத் அருண் மற்றும் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் வயதுவரம்பு 60 வரை மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது 59 வயது ஆகிய ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டாலும் ஒரு வருடம் தான் இருக்க முடியும் என்ற காரணத்திற்காக தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Bharath Arun

எது எப்படி இருப்பினும் இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் ஆவது உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement