இந்திய அணியில் ஆடவேண்டுமா..? முதலில் இதை செய்யுங்கள்..! முடியலைன்னா வீட்டுக்கு போங்க – ரவி சாஸ்திரி அதிரடி

rayudu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ‘யோ யோ ‘ எனப்படும் உடல் தகுதி தேர்வு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. கிரிக்கெட் அணி நிர்வாகமும் வீரர்களை பிட்டாக இருக்கவே அறிவுறித்தி வருகின்றது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தேர்வுகளை நடத்தி வருகிறது.
RaviOutPut

இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு புதிய தொல்லையாக அவதாரமெடுத்துள்ளது ‘யோ யோ ‘ டெஸ்ட். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய வேண்டும். ஆனால், இந்த யோ யோ டெஸ்டில் வெளிப்படை தன்மை இல்லை என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், இந்த ஒரு ‘யோ யோ’ டெஸ்ட் சரியான முறை அல்ல என்றும் ,இந்த ஒரே ஒரு டெஸ்டின் மூலம் உடற்தகுதி இல்லை என்று வீரர்களை ஒதுக்குவது சரியல்ல என்றம் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்வால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் என்றும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
rayudu

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ‘யோ யோ தேர்விற்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்,இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் யோ யோ தேர்வை அனைத்து வீரர்களும் எதிர்கொள்ள வேண்டும்.இதில் தேர்ச்சி அடைந்தால் அணியில் ஆடலாம். இல்லையென்றால் நடையை கட்டலாம்.’ என்று மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement