இனி இவரைப்போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைக்கப்போவதில்லை – ரவி சாஸ்திரி புகழாரம்

Shastri

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கேப்டனாக இருந்தவர். 16 வருடங்கள் ஒரு வீரராக ஆடி அசத்தி இருக்கிறார். ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக, மிகச்சிறந்த கேப்டனாக மூன்று பேர் செய்யக்கூடிய வேலையைச் தனது காலத்தில் ஒற்றை ஆளாக செய்து பல சாதனைகள் படைத்து இருக்கிறார்.

Dhoni

இவரது தலைமையில்தான் இந்திய அணி 28 ஆண்டுகள் கழித்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றது. அதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் இந்த மூன்று வகையான கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தோனிதான்.

இந்நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது 39 வயதில் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். தோனி ஆடுகளத்தில் இருந்தால் அனைத்து வீரர்களுக்கும் எப்போதும் ஒரு உத்வேகம் இருந்துகொண்டேதான் இருக்கும்.

Dhoni

அவர் களத்தில் இருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளது என்று கூறலாம். இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது : தோனி ஆடுகளத்தில் நேர்த்தியான முடிவுகளை எடுப்பதில் வல்லவர். இவருடைய கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் குறித்து பேசிய கிரிக்கெட் வல்லுநர்கள் அல்லது வீரர்கள் அல்லது ரசிகர்களை கிடையாது.

- Advertisement -

Ravi-Shastri

இந்தியாவில் மட்டுமில்லாமல் தோனிக்கு உலக அளவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் வரலாற்றில் தோனி போன்ற ஒரு வீரர் மீண்டும் கிடைப்பது கடினம். மேலும் டோனியின் இடத்தை இந்திய அணியில் பூர்த்திசெய்வது செய்யவே முடியாத காரியமாக இருக்கிறது. நாம் எப்படி இன்னொரு சச்சின் டெண்டுல்கரையும், இன்னொரு கபில் தேவையும் கண்டுபிடித்துவிட முடியாதோ அந்த அளவிற்கு தான் இன்னொரு தோனியையும் கண்டுபிடித்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.