வீரர்கள் பயிற்சியில். பயிற்சியாளர் எங்க இருக்காரு பாருங்க – வைரலாகும் சாஸ்திரியின் புகைப்படம்

Ravi

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கொல்கத்தாவில் உள்ள கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.

மேலும் அதனை புகைப்படமாக எடுத்து ரவிசாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல அவரை கலாய்த்து வருகின்றனர். வீரர்கள் பயிற்சி இருக்கும்போது பயிற்சியாளருக்கு கோவிலில் என்ன வேலை என்பது போல தொடர்ந்து கமெண்ட்டுகளை அவரது புகைப்படதிற்கு பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.