இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இவரது ஆட்டமே திருப்புமுனையாக அமைந்தது – ரவி சாஸ்திரி புகழாரம்

Shastri

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-1 என்ற நிலையில் சமநிலையை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே குவிக்க அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ரஹானேவின் சதத்தினாலும், ஜடேஜாவின் அரை சதத்தினாலும் 326 ரன்கள் குவித்தது.

Siraj-1

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் கில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ரஹானே 27 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற திருப்புமுனையாக அமைந்த காரணம் என்ன என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் இன்னிங்சில் ரகானே இறங்கியபோது 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ஆனாலும் அதன் பிறகு ஆறு மணி நேரம் தொடர்ந்து பேட்டிங்கில் ரகானே போராடினார்.

rahane 1

அதுவும் மேகமூட்டமான சீதோஷண நிலையில் பேட்டிங்க்கு கடினமான இந்த ஆடுகளத்தில் அந்த நாளில் 6 மணி நேரம் அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தியது என்பது நம்ப முடியாத ஒன்று. அவரது இன்னிங்சில் 112 ரன்கள் இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு பெரிய திருப்பு முனையாகும். ரஹானே, விராட் கோலி ஆகிய இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்க கூடியவர்கள். மேலும் கோலி களத்தில் எப்போதும் அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ஆனால் ரஹானே அதுபோன்று கிடையாது எப்போதும் பொறுமையான செயல்பாட்டையே அவர் முன்னிறுத்துவார்.

- Advertisement -

Rahane

அந்த வகையில் இந்த போட்டியில் தனது பொறுமையை கடைபிடித்து ரஹானே நல்லதொரு இன்னிங்சை விளையாடி உள்ளார். முதல் போட்டியில் நாங்கள் மோசமாக தோற்ற பிறகு இந்த போட்டியின் போது மீண்டும் வலுவாக எழுந்து பெற்ற வெற்றியில் ரஹானே அடித்த இந்த சதம் வெற்றிக்கு சிறப்பான பங்கினை கொடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த சாதனைகளில் இந்த வெற்றியும் ஒன்றாகும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.