- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அவர்தான் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் – மனதார புகழ்ந்து தள்ளிய ரவி சாஸ்திரி

இந்திய டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த டி20 உலக கோப்பை அணி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடப்போகும் ஹார்டிக் பாண்டியாவை வெகுவாக புகழ்ந்து பேசி இருந்தார். அதோடு சுனில் கவாஸ்கரின் கேப்டன்சியில் 1985 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்காக விளையாடிய ரவி சாஸ்திரி போன்று இந்த உலகக் கோப்பை தொடரில் ஹார்டிக் பாண்டியா மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியிருந்தார்.

ரவி சாஸ்திரி 1985 ஆம் ஆண்டு எவ்வாறு தனது பவுலிங், பேட்டிங் என அசத்தலான ஆல் ரவுண்டராக திகழ்ந்தாரோ அதேபோன்று இம்முறை உலகக் கோப்பையில் ஹார்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் ஒரு ஆல் ரவுண்டராக அசத்துவார் என்று பெருமைப்பட பேசி இருந்தார்.

- Advertisement -

காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கலை சந்தித்து வந்த ஹார்டிக் பாண்டியா தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அப்படி கம்பேக் கொடுத்ததிலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாண்டியா மீது உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா தன்னை போன்று செயல்படுவார் என்று சுனில் கவாஸ்கார் கூறியிருந்த கருத்திற்கு தற்போது பதில் அளித்துள்ள ரவி சாஸ்திரி கூறுகையில் : நான் இந்த விடயம் குறித்து ஏற்கனவே டிவீட் செய்துள்ளேன். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு பதிவினை இட்டுள்ளேன். டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தற்போதைய நம்பர் ஒன் ஆல்ரவுண்டர். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும்.

- Advertisement -

இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் இதை கூறிவிட்டேன். இந்திய அணியின் பயிற்சியாளராக நான் பயணித்ததில் ஹார்டிக் பாண்டியாவை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவர் மீது எனக்கு தனி கவனம் இருக்கிறது. அவர் நிச்சயம் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். இந்த உலகக் கோப்பையில் அவரது ஆட்டம் அசத்தலாக இருக்கும் எனவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : முகமது ஷமிக்கு பதிலாக மாற்றுவீரர் யார் தெரியுமா? – இவருக்கு தான் அந்த வாய்ப்பாம்

1980களில் மிகச் சிறப்பான ஆல்ரவுண்டராக திகழ்ந்த ரவி சாஸ்திரி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by