உங்களை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இந்திய வீரர்களை வாழ்த்திய ரவி சாஸ்திரி – எதற்கு தெரியுமா ?

Shastri
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடிந்த தொடர்களுக்கு பின்னர் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடும். அதே போன்று ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் எந்த அணி முதலிடத்தில் உள்ளது என்ற நிலவரத்தையும் வெளியிடும். அந்த வகையில் தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய அணி 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

IND

இந்திய அணிக்கு அடுத்த நியூசிலாந்து அணி ஒரு புள்ளிகள் குறைவாக பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் அல்லாது இதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் அதாவது தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக இந்திய அணி வலம் வந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்திய அணி நம்பர் ஒன் அணியாக விளங்கி வருவதற்கு தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பதிவிட்டதாவது நம்பர் ஒன் இடத்தை பெறுவதற்கு மன உறுதி மிக்க போராட்டமும், இலக்கை நோக்கி நிலையான முழு கவனம் தேவை.

IND

இவற்றை தற்போது உள்ள இந்திய அணி செய்து காட்டியுள்ளது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இடத்துக்கும், பாராட்டுக்கும் இந்திய அணி வீரர்கள் தகுதியானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான விதிமுறைகள் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தடைகளையும் கடந்து இந்திய அணி வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்திருக்கிறது.

ind

கடினமான நேரத்தில் நமது வீரர்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறார்கள் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது மட்டுமன்றி அனைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement