தோனியின் வேகத்திற்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. பிக்பாக்கெட் அடிப்பவர் கூட தோனியிடம் தோற்பார் – ரவி சாஸ்திரி புகழாரம்

Ravi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று இரவு 19:29 மணியளவில் தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஓராண்டாக ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருந்த அவரது ஓய்வு குறித்து நேற்று மனம் திறந்து தோனி அறிவிக்க ரசிகர்களுக்கு அது பெரும் வேதனையாக அமைந்தது.

Dhoni-1

- Advertisement -

அவரின் இந்த ஓய்வு முடிவை அடுத்து கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து “இந்தியா டுடே”க்கு பேசிய ரவிசாஸ்திரி கூறுகையில் : தோனி அனைத்து வடிவங்களிலும் ஆன கிரிக்கெட்டிலும் தனக்கானதாக ஆக்கியுள்ளார். அதுதான் அவரது சிறப்பு. விக்கெட் கீப்பிங் மற்றும் ரன்அவுட் செய்வதில் தோனி அசாத்தியமான திறமையுடையவர். அவரது அவரது வேகத்திற்கு இணையாக யாரும் இருக்க முடியாது.

ravi

குறிப்பாக அவர் ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் செய்யும்போது அவரது கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும் என்று கூறியுள்ளார். அவர் கூறிய இந்த கருத்தை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் தோனியின் இத்தனை ஆண்டுகள் சிறப்பான சேவை குறித்தும் அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் தோனி இன் இந்திய அணிக்காக நீல நிற உடையில் ஆட முடியவில்லை என்றாலும் மஞ்சள் நிறத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பதை காண காத்திருப்பதாகவும் தங்களது ஏக்கங்களை பதிவாக வெளியிட்டு வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement