புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் ஓய்வை அனுபவிக்க ஜமைக்கா நகரின் கடற்கரைக்கு ரவி சாஸ்திரி சென்றிருந்தார்.
Sunny Jamaica. The punch in my left hand tastes divine ???? pic.twitter.com/bGUTlp4NxZ
— Ravi Shastri (@RaviShastriOfc) September 4, 2019
கடற்கரைக்கு சென்ற ரவிசாஸ்திரி கையில் ஒரு மதுபானத்தை வைத்துக்கொண்டு சன்னி ஜமைக்கா எனது இடது கையில் சுவையான பானம் உள்ளது என்று அவர் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை கண்ட ரசிகர்கள் அவரை கண்டபடி விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே முதல் போட்டி முடிந்து ஒரு நாள் ஓய்வு இருந்த நிலையில் கடற்கரைக்கு சென்ற ரவி சாஸ்திரி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தையும் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் இவருக்கு இதே வேலையாகப் போய்விட்டது எப்போதும் மது உடன் இருக்கும் ரவிசாஸ்திரியை என்னவென்று சொல்வது என்று கமெண்டுகளை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.