4 ஆவது இடத்தில் இவரையும், 5 ஆவது இடத்தில் இவரையும் இறக்க திட்டமிட்டுளோம் – ரவி சாஸ்திரி அறிக்கை

Ravi

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்தானது. அதன் பிறகு தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது.

தற்போது இந்திய அணியில் நான்காவதாக விக்கெட் கீப்பர் பண்ட் விளையாடி வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 5 ஆவது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நான்காவது இடத்தில் இறக்கிவிடவும், மேலும் அவர் விளையாடி வந்த ஐந்தாவது இடத்தில் பண்ட்டை இறக்கி விட்டு அதிரடியாக ஆட வைக்கும் புதிதாக ஒரு திட்டம் ஒன்றை ரவிசாஸ்திரி வைத்துள்ளார்.

அதன்படி வரும் தென்னாபிரிக்க டி20 தொடரில் நான்காவதாக பண்ட் களமிறங்கினாலும் இதற்கு அடுத்து வரும் தொடர்களில் ஐயருக்கு 4-வது வீரராக வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பதன் மூலம் இந்திய அணி நான்காவது இடத்தை உறுதி செய்யும் திட்டத்தை ரவி சாஸ்திரி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கோலி, ரோகித், தவான் ஆகிய 3 பேரும் துவக்கத்தில் சிறப்பாக விளையாடுவதால் நான்காவதாக வரும் பண்ட் சிறப்பாக விளையாடினால் அது இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.