அஷ்வினின் கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறாரா ? ரவி சாஸ்திரி – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தொடர்ந்து இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வரும் அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டியில் கூட வாய்ப்பு கிடைத்தாலும் ஆடும் லெவனில் விளையாடுவது கிடையாது.

Ashwin

இந்நிலையில் அஸ்வின் இடம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அஸ்வினுக்கு இந்திய அணியில் விளையாட அனைத்து தகுதிகளும் இருக்கிறது. இருப்பினும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அவர் காயமடைந்தார் அதன் காரணமாக அவருக்கு பதிலாக குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் அந்த தொடர்களில் தங்களது திறமையை நிரூபித்தார்.

- Advertisement -

இதனால் அஷ்வினுக்கு இடம் கிடைக்க அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. குல்தீப் மற்றும் ஜடேஜா இருவரை விட அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் தற்போதைய சூழலில் அவர்கள் இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஒருவேளை அஸ்வின் மீண்டும் அணிக்காக விளையாட வேண்டும் என்றால் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரை அணியில் சேர்க்கும் அளவுக்கு சூழ்நிலை அமைய வேண்டும் என்று பேட்டியளித்தார் ரவிசாஸ்திரி.

ashwin 2

இந்த பேட்டியை வைத்து பார்க்கும்போது தொடர்ந்து ஜடேஜா மற்றும் குல்தீப் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அஷ்வினை அப்படியே ஓரம் கட்ட நினைப்பதாக தோன்றுகிறது. ஆனால் அஸ்வின் எவ்வளவு திறமையான வீரர் என்றால் இதுவரை இந்திய அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement