இனிவரும் தொடர்களில் இவருக்கு 4 ஆவது வீரராக களமிறங்க தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் – ரவி சாஸ்திரி உறுதி

Ravi
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்து டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில தினங்களுக்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு வரை நீடிப்பார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Iyer-2

அதனை தொடர்ந்து தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணி நான்காவது வீரர் குறித்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலக கோப்பை தொடரின் நான்காவது வீரர் குறித்து பல கேள்விகள் எழுந்தன. நாங்களும் 4-வது வீரராக வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சோதனை செய்தோம்.

- Advertisement -

ஆனால் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர். தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் விழுந்தாலும் 5 ஆவது வீரராக இறங்கி சிறப்பாக ஆடினார். எனவே இனிவரும் தொடர்களில் அவருக்கு இந்திய அணி 4-வது வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படும். அவருடைய ஆட்டம் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக இருக்கிறது. அவர் அணியின் சூழலை பொறுத்து நன்றாக ஆடுகிறார்.

எனவே இனிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்திய அணி நான்காவது வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என்றும் அவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் வரும் தொடர்களில் தரப்படும் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement