மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா ஏறத்தாழ இழுந்துள்ளது. மேலும் 10 வருடங்கள் கழித்து பாரடர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முன்னதாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 3 கேட்ச்கள் விட்டது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் அது ஈடு செய்யும் வகையில் 340 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு உண்மையாகவே அவர் நங்கூரமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். ஏனெனில் ஒருபுறம் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களும் சுமாராக விளையாடிய அழுத்தத்தை கொடுத்தனர்.
தரமான ஜெய்ஸ்வால்:
ஆனால் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 208 பந்துகளை எதிர்கொண்டு 82 ரன்கள் அடித்து முழுமூச்சுடன் வெற்றிக்காக போராடி நடுவரின் சுமாரான தீர்ப்பால் வீழ்ந்தார். சொல்லப்போனால் இந்தியா அடித்த 155 ரன்களில் ஜெய்ஸ்வால் மட்டும் தனியாளாக 82 ரன்கள் குவித்தார். அது போக முதல் இன்னிங்ஸிலும் 82 ரன்கள் அடித்த அவர் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 161 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது.
இத்தனைக்கும் ஜெய்ஸ்வால் தனது வாழ்நாளில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடுகிறார் என்பது சிறப்பம்சமாகும். இந்நிலையில் 3 கேட்ச்சுகள் விட்டு கேப்டன் ரோஹித் சர்மாவிடம் திட்டு வாங்கியும் மனம் கலங்காமல் ஜெய்ஸ்வால் இவ்வளவு திடமாக விளையாடுவது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
திடமான ஜெய்ஸ்வால்:
“ஜெய்ஸ்வால் துப்பாக்கியை போன்ற வீரர். இந்த வயதிலேயே அவர் பெரிய ரன்களை குவிக்கும் அவர் வேகம், சுழலுக்கு எதிராக நன்றாக விளையாடுகிறார். அனைத்து புறங்களிலும் அடிக்கும் திறமையைக் கொண்டுள்ள அவர் தேவைப்பட்டால் பொறுமையுடன் விளையாடும் தன்மையும் இருக்கிறது. இந்த போட்டியில் அவர் முக்கியத்துவத்தை அறிந்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடினார்”
இதையும் படிங்க: வம்பிழுத்த கோன்ஸ்டஸ்க்கு பேட்டால் ஜெய்ஸ்வால் முரட்டு அடி.. ஸ்லெட்ஜ் செய்த ஸ்டார்க்கிற்கு மாஸ் பதிலடி
“3 கேட்ச்கள் விட்டது அவரை இன்னும் இந்தப் போட்டியில் வலிமையாக்கியது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் இந்த வருடம் முழுவதுமே அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 1478 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட இந்த வருடம் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.



