இது ஐபிஎல் ஹை-வே கிடையாது.. சாதாரணமா நினைக்காதீங்க.. பாகிஸ்தான் போட்டிக்கு முன் இந்தியாவை எச்சரித்த சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜூன் ஐந்தாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து 97 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டிலானி 26 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 52*, ரிஷப் பண்ட் 36* ரன்கள் எடுத்து 12.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் எளிதான வெற்றி கண்ட இந்தியா குரூப் எ பிரிவில் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

- Advertisement -

ஐபிஎல் கிடையாது:
ஆனால் புதிதாக கட்டமைக்கப்பட்ட நியூயார்க் மைதானத்தில் செயற்கையாக பொருத்தப்பட்டுள்ள பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக அங்கு வேகம், பவுன்ஸ் அதிகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட தடுமாறுகின்றனர். மறுபுறம் அதை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை எடுக்கின்றனர்.

அதனாலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டி தென்னாப்பிரிக்காவும் அயர்லாந்தை 96 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இந்தியாவும் எளிதாக வென்றது. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியாததால் நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்ற உணர்வைக் கொடுப்பதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் நியூயார்க் பிட்ச் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் நேஷ்னல் ஹை-வே போல இல்லை என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் யோசித்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இதுப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். வித்யாசமான பிட்ச்களில் வித்தியாசமான ஷாட்டுகள் இருக்க வேண்டும். இந்த மைதானம் முற்றிலும் வித்தியாசமானது”

இதையும் படிங்க: டாஸ் போடும்போதே எனக்கு தெரிஞ்சிபோச்சி.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு பேசிய – அயர்லாந்து கேப்டன்

“இது ஐபிஎல் தொடரில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது. அதனால் இங்கே நீங்கள் உங்களை உட்படுத்திக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து பவுன்ஸ் மற்றும் வேகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதைப் பார்த்த பின் சாதாரணமாக விளையாடுவதை காட்டிலும் உங்களுக்கு நீங்களே 2 – 3 பந்துகள் நேரம் கொடுத்து விட்டு உங்கள் வழியில் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement