என்னை மாதிரி ஆகிடாதீங்க கம்பீர்.. பாகிஸ்தானை ஜெய்க்கல்லன்னா டிரைவர் கூட கேட்பாரு.. ரவி சாஸ்திரி

Ravi Shastri 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளை விட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிக்குத் தான் ரசிகர்களிடம் வழக்கம் போல அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில் பரம எதிரியான பாகிஸ்தானை விட்டுக் கொடுக்காமல் வீழ்த்த வேண்டும் என்பதே இந்திய ரசிகர்கள் மற்றும் மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதே போல கோப்பையை வெல்லாவிட்டாலும் இந்தியாவிடம் தோற்கக் கூடாது என்பதே பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் லட்சியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நீங்கள் எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றால் சாதாரண டாக்ஸி டிரைவர் கூட கிண்டலாக கேள்வி கேட்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கம்பீருக்கு அட்வைஸ்:

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக எப்படியாவது வெற்றிப் பெறுங்கள் என்று கௌதம் கம்பீரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் ரவி சாஸ்திரி – விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் முதல் முறையாக தோற்கடித்தது. அது போன்ற நிலைமையை நீங்களும் சந்திக்கக் கூடாது என்று கம்பீருக்கு தெரிவிக்கும் சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நான் 7 வருடங்கள் பயிற்சியாளராக இருந்தேன். ஊடகங்களில் கேட்கும் போதெல்லாம் கம்பீர் போலவே நானும் சொன்னேன். அதாவது பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டி மட்டும் முக்கியமல்ல என்று சொன்னேன். ஆனால் உண்மையில் உங்களுடைய அடி மனதில் பாகிஸ்தானுக்கு எதிராக எப்படியாவது நீங்கள் வெல்ல விரும்புவீர்கள். ஏனெனில் நீங்கள் தோல்வியை சந்தித்தால் அடுத்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் வரை மக்களின் நினைவில் இருக்க மாட்டீர்கள்”

- Advertisement -

டிரைவர் கேட்பாரு:

“நீங்கள் கடந்தக் காலங்களில் என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கடைசி 10 போட்டிகளில் 10, 9, 8 வெற்றிகளைப் பெற்றாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக நீங்கள் தோற்றால் அடுத்த முறை அவர்களைத் தோற்கடிக்கும் வரை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். தெருவில் செல்லும் டாக்ஸி டிரைவர் கூட இந்தியாவுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்பார்”

இதையும் படிங்க: அந்த சிக்ஸ் பாகிஸ்தானை உடைச்சுது.. 31/4ன்னு விழுந்தப்போ கோலியிடம் இதை தான் சொன்னேன்.. பாண்டியா பேட்டி

“அதே நிலைமை தான் பாகிஸ்தான் அணிக்கும். அப்போட்டி முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம் 2021 டி20 உலகக் கோப்பை தோல்வி இந்திய அணியின் மனதில் விளையாடாது. ஏனெனில் டி20 போட்டியை விட 50 ஓவர் போட்டி முற்றிலும் வித்தியாசமானது. அது இந்தியாவுக்கு நிறைய பொருந்தும். ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட இந்தியா அனுபவமிக்க அணி” எனக் கூறினார்.

Advertisement