விராட் கோலியிடம் பேசி ரிட்டையராக வேணாம்ன்னு சொன்னேன்.. இதனால கிளம்புறேன்னு சொல்லிட்டாரு.. சாஸ்திரி

Ravi Shastri 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. முன்னதாக அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ மற்றும் சில முன்னாள் இந்திய வீரர்கள் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

தற்போது அதை உறுதி செய்துள்ள ரவி சாஸ்திரி ஓய்வு முடிவை வாபஸ் பெறுமாறு விராட் கோலியிடம் பேசியதாக கூறியுள்ளார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தம்முடைய அனைத்தையும் கொடுத்து விட்டதாக விராட் கோலி சொன்னதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே மனதளவிலும் உலகளவிலும் சோர்வடைந்த தாம் இனிமேலும் 100% அர்ப்பணிப்புடன் விளையாட முடியாது என்று உணர்ந்ததாலேயே விராட் கோலி ஓய்வு பெற்றதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

- Advertisement -

பேசிய சாஸ்திரி:

இது பற்றி ஐசிசி இணையத்தில் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “ஆம் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக நான் விராட் கோலியிடம் பேசினேன். அப்போது அனைத்தையும் கொடுத்து விட்டோம் என்ற தெளிவு அவருடைய மனதில் இருந்தது. அவரிடம் எந்த கவலையும் வருத்தமும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவரிடம் சில கேள்விகளை நான் கேட்டேன்”

“அப்போது என்னுடைய மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம் இதுவே ஓய்வுக்கான சரியான நேரம் என்பதில் விராட் கோலி தெளிவாக இருந்தது தெரிந்தது. இதுவே நாம் விடை பெறுவதற்கான நேரம் என்று அவருடைய மனம் அவரின் உடலுக்கு சொன்னது. பொதுவாக விராட் கோலி எதையாவது செய்ய முடிவெடுத்தால் அதற்காக தன்னுடைய 100% பங்களிப்பை கொடுப்பார். அதை மற்றவர்கள் செய்வது எளிதல்ல”

- Advertisement -

ஏற்காத கோலி:

“ஒரு வீரர் விராட் கோலியின் வேலையை செய்தால் அப்போது நீங்கள் பின்னே உட்கார்ந்து கொள்ள வேண்டும். ஆனால் விராட் கோலியை பொறுத்த வரை களத்திற்கு அணி செல்லும் போது அவரே அனைத்து முடிவுகளையும் எடுக்க விரும்புவது போன்ற நிலைமை இருக்கும். அது போன்ற ஈடுபாட்டை தான் விராட் கோலி களத்தில் காட்டுவார்”

இதையும் படிங்க: விராட் கோலியை அவுட்டாக்குன ஸ்டார்க் டெக்னிக் ரொம்ப ஈஸி.. அவரின் மனைவி கிண்டல் பேட்டி

“அது போன்ற ஈடுபாட்டுடன் தொடர்ந்து ஓய்வு எடுக்காமல் விளையாடும் போது அங்கே காயங்கள் ஏற்படலாம். அப்போது எந்த வகையான ஃபார்மெட்டில் விளையாடுகிறோம் என்ற தெளிவு இல்லை என்றால் அந்த காயங்கள் தொடர்ந்து இருக்கும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி ஐபிஎல் தொடர், இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement