ரவி சாஸ்திரி போல் உருவத்தில் அப்படியே உள்ள நபர் – வைரலாகும் புகைப்படம் இதோ

Ravi

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கும்ளேக்கு பிறகு இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கடந்த உலக கோப்பை தொடருடன் பதவிக்காலம் முடிவடைந்த ரவி சாஸ்திரிக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவியில் அடுத்த டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டது.

இவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி முக்கியமான தொடர்களின் இறுதியில் தோற்றாலும் பல வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவிசாஸ்திரி போன்று உருவத்தில் அவரை போல அச்சு அசலாக இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி பேஸ்பால் போட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும் ஒரு ரசிகர் செல்பி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படம் ரவி சாஸ்திரியின் உருவத்தோடு சரியாக மேட்ச் ஆவதால் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் நீங்களே இந்த புகைப்படத்தைப் பார்த்தால் அசந்து விடுவீர்கள்.