உலகக்கோப்பையை இழந்தாலும் தலையை தூக்கி நிமிர்ந்து செல்லுங்கள். நாம் இதனை செய்துள்ளோம் – ரவி சாஸ்திரி

Ravi

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

ferguson

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : இந்த உலகக் கோப்பை தொடரை இழந்தது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணி அனைத்து வகையிலும் தகுதியான அணிதான். இருப்பினும் துரதிஷ்டவசமாக நாங்கள் அரையிறுதியில் தோற்றது ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக உள்ளது.

Dhoni

இருப்பினும் இந்திய அணி வீரர்கள் இந்தியாவிற்கு செல்லும் போது தலையை தூக்கி நடந்து செல்லுங்கள் ஏனென்றால் இந்திய ரசிகர்களின் மரியாதையை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்திய அணியை ரசிகர்கள் பெருமையுடன் பார்க்கிறார்கள். ஒருபக்கம் நமக்கு கடினமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக நாம் சிறப்பாக விளையாடி வந்துள்ளோம்.

- Advertisement -

Kohli

இந்த உலக கோப்பை தொடரிலும் நமது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அரையிறுதியில் கிடைத்த தோல்வி துரதிர்ஷ்டவசமானது. எனவே ரசிகர்கள் நம்மை அன்போடு ஏற்றுக் கொள்வார்கள். நாம் அவர்களிடையே பெருமையாக செல்லலாம் என்று ரவிசாஸ்திரி பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement