இவர் நல்லா ஆடவில்லை என்றாலும் பரவாயில்லை. அவருக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன் – ரவி சாஸ்திரி உறுதி

Ravi

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

pant 1

இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் பண்ட்க்கு பதிலாக மற்ற வீரர்களை சேர்க்குமாறு பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும் டெஸ்ட் அணியில் மற்றொரு விக்கெட் கீப்பரான சஹா உள்ளதால் அவரை சேர்க்கலாம் என்றும் யோசனை கூறி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் பண்ட் இடம் குறித்து ரவிசாஸ்திரி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : பண்ட் தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவர் நிச்சயம் ஒரு சிறந்த வீரராக உருவெடுப்பார். அவர் அவருடைய ஷாட் தேர்வு தற்போது தவறாக உள்ளது அதனை அவர் திருத்திக்கொண்டு கண்டிப்பாக இந்திய அணியின் மேட்ச் வின்னராக மாறுவார். அவருக்கு தேவையான வாய்ப்பை நாங்கள் தற்போது அளித்து வருகிறோம்.

pant six

ஏனெனில் ஒரு ஸ்பெஷலான வீரராவார் அவரிடம் உள்ள குறைகளை நீக்கி அவர் சிறந்த வீரராக மாற நாம் சிறிது காத்திருந்து ஆக வேண்டும். அதற்கான நேரம் இது அவரால் இந்திய அணிக்கு வெற்றிகரமான மேட்ச் வின்னர் ஆக மாற முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே இந்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலும் பண்ட் நிச்சயம் விளையாடுவார் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.