இந்திய அணியிலிருந்து உங்களக்கு நிச்சயம் அழைப்பு வரும். வலிமையுடன் காத்திருங்கள் – ரவி சாஸ்திரி ட்வீட்

Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட மூன்று வகையான இந்திய அணியும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்திருந்தது. தங்கராசு நடராஜன், வாசிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி போன்ற தமிழக வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்தது.

INDvsAUS

- Advertisement -

கடந்த பல வருடங்களாக உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ்க்கு இந்த அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்த்தனர். இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 12 போட்டிகளில் விளையாடி 362 ரன்கள் குவித்துள்ளார். பல முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கரை சேர்த்திருக்கிறார். இதன் காரணமாக இந்த வருடம் இந்திய அணியில் இவர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவரின் பெயர் இல்லாததால் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து குவித்தார் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியின்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் சிறு மோதல் ஏற்பட்டது.

SKY

இந்த போட்டியை பார்த்த பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் சூரிய நமஸ்கார் வலிமையுடன் இருங்கள். பொறுத்திருங்கள் உங்களுக்கான இடம் கிடைக்கும் என்பது போல் சூரியகுமார் குமாரின் புகைப்படத்தோடு அவரை செய்து பதிவு செய்திருந்தார்.

அவரின் அந்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் அவருக்கு சீக்கிரம் அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

Advertisement