ஆஸ்திரேலிய தொடரின் போது ஆர்டர் போட்ட ஆஸி நிர்வாகம். மிரட்டல் விடுத்த ரவி சாஸ்திரி – ஸ்ரீதர் பேட்டி

Shastri

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

IND-1

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஆர் ஸ்ரீதர் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டிருக்கிறார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பின் இந்திய ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர்.

Sridhar

அப்போது “ஆஸ்திரேலியா தொடரே தொடங்கவில்லை அதற்குள் ஆஸ்திரேலியர்கள் தங்களது ஸ்லெட்ஜிங்கை தொடங்கி விட்டனர் என்றார் ஸ்ரீதர். ஐபிஎல் தொடருக்காக நாங்கள் துபாயில் குரோன்டைனில் இறந்தபோது ஆஸ்திரேலியர்கள் திடீரென்று இந்திய குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள். உடனடியாக நாங்கள் ஏராளமான போன் செய்து அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் முடியவே முடியாது என்று கூறி விட்டார்கள்.

- Advertisement -

sridhar 1

இதனால் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஒரு ஜும் கால் என்று ஏற்பாடு செய்தார். அதில் ரவி சாஸ்திரி நாங்கள் குடும்பங்களுடன் வர அனுமதி தரவில்லை என்றால் நாங்கள் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வரவில்லை என்று ரவிசாஸ்திரி கூறினார். இதன் பிறகுதான் குடும்பங்களுடன் வருவதற்கு ஆஸ்திரேலிய நிர்வாகம் அனுமதி அளித்தது” என்று இந்திய பவுலிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் அஸ்வினிடம் பகிர்ந்துகொண்டார்.