இங்கிலாந்தில் வைத்து தனது முடிவை கங்குலியிடம் தெரிவிக்கவுள்ள ரவி சாஸ்திரி – எல்லாம் கன்பார்ம் தான்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய பதவிக்காலம் ஏற்கனவே இடையில் முடிவடைந்த நிலையில் கோலியின் வேண்டுகோளுக்கிணங்க ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவியை தொடர்ந்தார். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரோடு இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

Shastri

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தனது பதவியை நீட்டிக்க ரவிசாஸ்திரி விரும்பவில்லை என்றும் இது குறித்த தகவலை அவர் பிசிசிஐ-யிடம் தெரிவித்து விட்டார் என்ற தகவலும் அன்மையில் வெளியாகியது. இந்நிலையில் தற்போது இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் பொருளாளர், செயலாளர், நிர்வாகிகள் என அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண லண்டன் சென்றுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த இரண்டாவது போட்டி முடியும் வரை அவர்கள் அங்கு தங்கி இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Shastri

இந்நிலையில் இந்த இடைப்பட்ட நாட்களில் கங்குலி மற்றும் அவரது நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் நிச்சயம் ரவி சாஸ்திரி இந்திய அணியின் எதிர்காலம் மற்றும் தனது பதவிக்காலம் குறித்து பல்வேறு விடயங்களை விவாதிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்திலேயே ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பணியில் தொடர விரும்பவில்லை என்று தெரிவிப்பார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரவிசாஸ்திரி பதவியை தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தால் நிச்சயம் இந்த கூட்டத்தில் அடுத்த பயிற்சியாளர் குறித்த பல்வேறு விடயங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement