முடிவுக்கு வர இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவி – அடுத்து என்ன செய்யப் போகிறார் தெரியுமா ?

Ravi-shastri
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நபர்களான சச்சின் கங்குலி லட்சுமண் ஆகியோரின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானார்.

Ravi

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற ரவி சாஸ்திரி வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தினை அடுத்து ரவி சாஸ்திரி அணியின் பயிற்சியாளராக நீடிப்பாரா ? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

- Advertisement -

அதன்படி தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலக கோப்பைக்கு பிறகு அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நீட்டிக்கும் திட்டம் உள்ளது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரிக்கெட் அறிவுரை குழு உறுப்பினர்களான சச்சின் கங்குலி லட்சுமண் ஆகியோரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

Shastri

எனவே இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பௌலிங் பயிற்சியாளராக அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் தொடர்வார்கள் என்று நம்பப்படுகிறது.

Advertisement