ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

Ravi
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கிட்டதட்ட 2000 விண்ணப்பங்கள் வந்தன. இந்நிலையில் கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழு 6 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை பிசிசிஐக்கு சமர்ப்பித்தது.

அதன்படி இன்று அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டது. அந்த நேர்காணலின் முடிவில் தற்போது பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே கபில்தேவ் முன்மொழிந்தது போலவே இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பதற்கான காரணத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி ரவிசாஸ்திரி பயிற்சி காலத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை குவித்து வந்ததது. வெளிநாடுகளில் நடந்த பல டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. மேலும் பல திறமையான வீரர்கள் அணிக்குள் வந்து வெற்றி விழுக்காடு அதிகரித்தது.

Ravi

கோலி மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோரது கூட்டணியில் அதிக வெற்றிகளை இந்திய அணி பெற்றிருப்பதால் அவர் பயிற்சியாளராக மீண்டும் தொடர்வார் என்றும் மேலும் அவருடைய பயிற்சி காலம் அடுத்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement