இரண்டாவது முறையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? – விவரம் இதோ

Ravi-Shastri
- Advertisement -

ரவிசாஸ்திரி அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த பிறகு அவருக்கு பதிலாக இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டாவது முறை ரவிசாஸ்திரி பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டார். அவரோடு பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் என அனைவரும் மீண்டும் பொறுப்பை தொடங்கினர்.

Ravi

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கிடையில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிசாஸ்திரி சம்பள உயர்வு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதன்முறையாக இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி பதவி ஏற்கும்போது ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

அதன் பிறகு தற்போது அவருக்கு 20 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட்டு 9.5 கோடி முதல் 10 கோடி ஆண்டு வருமானமாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிகிறது. இரண்டாவது முறை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது.

ravi koli 2

இதுகுறித்து ரவி சாஸ்திரியின் கருத்து யாதெனில் : நானும் இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக மாற விரும்பினேன். மேலும் அதன் காரணம் யாதெனில் இந்திய அணி மீது உள்ள நம்பிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக இளம் வீரர்கள் உள்ளனர். மேலும் தற்போது உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் வரும் தொடர்களில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தி சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறேன் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

Advertisement