மழையால் இந்திய தென்னாபிரிக்க போட்டி ரத்துசெய்ப்பட்டதற்கு முன்பாக நேற்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் ஷிகர் தவானுடன் அமர்ந்திருக்கும் ரவிசாஸ்திரி காபி, மலைகள், தவானுடன் கிரிக்கெட் உரையாடல் என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்து குய்ப்ட்டு இருந்தார்.
Coffee, Mountains, Cricket and Conversation – with @SDhawan25 ???????? #TeamIndia #IndvSA pic.twitter.com/AaaW1BCG0A
— Ravi Shastri (@RaviShastriOfc) September 15, 2019
இதனைக் கண்ட இந்திய ரசிகர்கள் என்ன சார் உங்கள் உடன் வழக்கமாக இருக்கும் மது பாட்டிலை காணவில்லை/ ஒருவேளை காபியில் விஸ்கி கலந்து குடிக்கிறீர்களா ? என்பது போன்று ரவிசாஸ்திரியை கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த கனமழை காரணமாக நேற்றைய போட்டி டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கத.