- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா கம்பேக் கொடுக்க கமின்ஸை ரூட்டை எடுக்கனும்.. ரோஹித் இதை மாத்தணும்.. ரவி சாஸ்திரி 2 அட்வைஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரில் வெற்றி பெற அடுத்த போட்டிகளில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த தோல்விக்கு ரோகித் சர்மா பேட்டிங் சுமாராக கேப்டனாக அணியை முன்னின்று சிறப்பாக வழி நடத்தாததும் முக்கிய காரணமாக அமைந்து. இந்நிலையில் இந்த தோல்வியிலிருந்து மீண்டும் இந்திய அணி கம்பேக் கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் வார்த்தைகளை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சாஸ்திரி அட்வைஸ்:

மேலும் இரண்டாவது போட்டியில் பெரிய ரன்கள் குவிக்காததால் ரோகித் சர்மாவின் பாடி லாங்குவேஜ் நன்றாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே 3வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப ராகுலுக்கு பதிலாக ரோஹித் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அதனால் தான் ரோகித்தை நான் மேலே விளையாட விரும்பினேன். அங்கே தான் அவரால் ஆக்ரோஷம் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மிடில் ஆர்டரில் விளையாடுவதால் அவருடைய பாடி லாங்குவேஜ் கொஞ்சம் அடங்கி விட்டதாக நினைக்கிறேன். ரன்கள் எடுக்காததால் அது அவரிடம் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறேன். எனவே அவரை அதிக ஈடுபாட்டுடன் நான் பார்க்க விரும்புகிறேன்”

- Advertisement -

ஓப்பனிங்கில் ரோஹித்:

“தற்போதைய நிலையில் இந்த தொடரில் மீண்டும் நீங்கள் வர முடியும் என்று நம்ப வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இந்த 2 அணிகளும் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தோற்கடித்துக் கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது ஒன்றில் நீங்கள் தோற்றால் மற்றொன்றில் வெல்வீர்கள். எனவே அந்த நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். அதற்காக ராகுல் மிடில் ஆர்டருக்கு செல்ல வேண்டும். ஒருவேளை ரோகித் முதல் போட்டியில் விளையாடியிருந்தால் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடியிருப்பார்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் இந்த 2 கேப்டன்ஷிப் தவறு தான் படுதோல்விக்கு காரணம்.. பேட்டிங் அதுக்கு மேல.. பசித் அலி

“முதல் போட்டியில் தோற்ற பின் நாங்கள் வெற்றிக்கு போதுமானதாக இல்லை ஆனால் ஸ்கோர்போர்டில் தெரியும் அளவுக்கு மோசமான அணி இல்லை என்று பட் கமின்ஸ் கூறியிருந்தார். அந்தக் கூற்றை இந்திய அணி தற்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இதை எடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 13ஆம் தேதி காபாவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -