நான்தான் மதிக்கல. நீங்களாவது சொல்ற பேச்சை கேளுங்க – ரோஹித்துக்கு அட்வைஸ் கொடுத்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகள் ஆகவே விளையாடாமல் இருக்கிறார். அவருக்கு பதிலாக மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் இந்திய அணி அறிவித்தது அந்த பட்டியலில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்கவில்லை.

rohith

காயம் காரணமாக காரணமாக ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. ஆனால் பிசிசிஐயின் வீரர்கள் பட்டியல் வெளியான நாளுக்கு அடுத்த நாள் ரோகித்சர்மா பயிற்சி செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. இதனால் ரோகித் சர்மா காயம் அடைந்து உள்ளாரா ? இல்லையா ? என்பது குறித்து பிசிசிஐ அவரை தேர்வு செய்ய மறுக்கிறதா ? என்பது குறித்தும் சர்ச்சை ஏற்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் உண்மைதான் மேலும் அவர் குணமடைய 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும் அதனால் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற மாட்டார் என்றும் பிசிசிஐ மருத்துவக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரோகித்சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரோகித் சர்மா செய்தது தவறு என கூறியுள்ளார்.

rohith 1

ஏனெனில் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் : ஒரு வீரருக்கு காயம் ஏற்படும்போது அவர் அறையில் முடங்கி இருக்க விரும்ப மாட்டார். நிச்சயம் பயிற்சிக்கு வந்து தனது பார்மை மீட்டெடுக்க விரும்புவார். ஆனால் அதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் காயம் இருக்கும் போது ஒருவர் மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தால் அது பெரிதாக மாற வாய்ப்புள்ளது. இதே போன்ற சூழ்நிலையை நான் அனுபவித்துள்ளேன்.

- Advertisement -

1991 ஆம் ஆண்டு என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அப்போது நான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடி இருக்க கூடாது. ஏனெனில் காயத்தோடு நான் அந்த தொடர் முழுவதும் விளையாடியதால் அதன் பின்னர் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இல்லை என்றால் இன்னும் நான் 4 – 5 ஆண்டுகள் விளையாடி இருப்பேன்.

shastri 1

காயத்தின் தன்மை குறித்து அப்போது நான் யோசிக்காமல் செய்த தவறுதான் கிரிக்கெட்டை மொத்தமாக இழந்தேன். அந்த தவறை ரோகித் செய்யக்கூடாது எனவும் தான் விரும்புவதாக சிறிது ஓய்வுக்குப் பிறகு உடல்நிலை சரியானதும் அவர் அணிக்கு திரும்பினால் அது அவருக்கும் பலம், அணிக்கும் பலம் என ரோகித் சர்மாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார் ரவிசாஸ்திரி.

Advertisement