MS Dhoni : உலகக்கோப்பை தொடரில் தோனிக்கு இதுதான் வேலை – ரவி சாஸ்திரி பேட்டி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Ravi
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் ரவிசாஸ்திரி கூறியதாவது : இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் பந்து வீச்சின் மூலம் வெற்றியை குவிக்கும்.

dhonistand

மேலும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டும் சிறப்பாக உள்ளது. இதில் தோனிக்கு முக்கியமான ரோல் ஒன்று உள்ளது. ஒருநாள் அணியில் தோனி தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனவே இவர் இந்திய அணிக்காக போட்டியில் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் பெரிய வேலை அவரிடம் உள்ளது. அதனை அவர் சிறப்பாகச் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறோம் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

Advertisement