இனி பிளைட் ஏறும்போதெல்லாம் சூரரைப்போற்று நியாபகம் தான் வரும் – பிரபல இந்தியவீரர் நெகிழ்ச்சி

Surya

பிரபல தமிழ் நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரைப்போற்று” சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், ஊர்வசி ,கருணாஸ் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Suriya

அதுமட்டுமின்றி பிரபல இளம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் தளத்தின் மூலம் நேரடியாக ஓடிடி வழியாக இப்படம் வெளியாகி உள்ளது. மேலும் ரசிகர்களை மட்டும் தவறாமல் பல்வேறு தரப்பட்ட பிரபலங்களையும் இப்படம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த சூரரைப்போற்று படத்தை பார்த்து உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஸ்வின் படத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் “இனிமேல் நான் ஒவ்வொரு முறை பிளைட் ஏறும் போதும் எனக்கு இந்த படம் தான் ஞாபகத்திற்கு வரும் என்று அவர் பதிவிட்டுள்ளார். அஸ்வினின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -