கிரிக்கெட்டில் சச்சினின் இடத்தை நெருங்கும் அளவிற்கு புகழ்பெற்றவர் இவர் மட்டும் தான் – முன்னாள் பாக் வீரர் புகழாரம்

Sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் அழுத்தினார். தோனியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினாலும் அவருக்கு உண்டான மரியாதையை தங்களது வாழ்த்துக்களை மூலம் தெரிவித்து வந்தனர்.

Dhoni

- Advertisement -

மேலும் உலகில் உள்ள பல்வேறு முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும், நிபுணர்கள் என பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தோனிக்கு தெரிவித்தனர். மேலும் தோனி குறித்த தங்களது அனுபவங்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லதீப் யூடியூப் பேட்டி ஒன்றுக்கு அளித்த தகவலில் தோனி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறுகையில் :

தோனியின் பரந்த மனப்பான்மை மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றை கங்குலி சரியாக வெளிக்கொண்டு வந்தார். நான் தோனி முதலில் ஒரு கால்பந்து வீரர் என்றும் கோல்கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன். சச்சினின் இடத்தை நெருங்கும் அளவிற்கு இந்திய அளவில் ஒரு வீரர் இருப்பதாகவும் அவர் தோனி என்று தனது எனது சக வீரர் ஒருவர் தெரிவித்தார். அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

Sachin

அது எப்படி முடியும் ? சச்சின் இடத்தில் சச்சின் மட்டுமே என நினைத்தேன். ஆனால் அன்மையில் சச்சினின் இடத்தை டோனி நெருங்கி விட்டதை நான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் செய்திராத சாதனையாக டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என ஐசிசி நடத்திய அனைத்து கோப்புகளையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது மட்டுமின்றி உலக அளவிலும் அவர் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், சென்னை அணியின் ஈடுயினை இல்லாத தலைவராக அவர் விளங்கியதாகவும் ரஷீத் லதீப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement