என்ன யோசனை இது. முட்டாள்தனம் இந்த யோசனை சரியா வராது. கங்குலியை விமர்சித்த – பாக் முன்னாள் வீரர்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பதவி ஏற்ற பின் பல அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி வருகிறார். அதன் முதல் படியாக இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தி அனைவரையும் அசர வைத்தார் கங்குலி அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் குறித்த பல்வேறு ஆக்கபூர்வ அம்சங்களை செய்லபடுத்த ஆலோசனையும் செய்து வருகிறார்.

Ganguly-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலும் அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளார் கங்குலி. அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் அணிகளாக இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னொரு அணியும் சேர்த்து நான்கு நாடுகள் கொண்ட சூப்பர் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இடம் கங்குலி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்படி இந்த பேச்சுவார்த்தை சரியாக அமையும் பட்சத்திலும், ஐ.சி.சி இதற்கு அனுமதிக்கும் பட்சத்திலும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சூப்பர் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் தொடர் நடைபெறும் என்றும் இந்த திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை கங்குலி தெரிவித்துள்ளார்.

Ganguly 1

இந்நிலையில் இது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஐசிசி அதிகபட்சமாக மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு போட்டியில் மட்டுமே அனுமதி இதுவரை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறுகையில் : இது மாதிரி நான்கு அணிகள் மட்டும் தொடரில் கலந்து கொண்டு ஆடுவது என்பது மற்ற அணிகளை தனிமைப்படுத்தும் ஒரு நடவடிக்கை ஆகும். இது ஆரோக்கியமான விஷயம் அல்ல கங்குலியின் இந்த முடிவு ஒரு பிளாப் ஐடியா என்று அவர் விமர்சித்துள்ளார்.

ganguly-bcci 2

இது ஒருபுறமிருக்க இந்திய ரசிகர்கள் அவரது இந்த கருத்தினை பார்த்து எப்படியும் நான்கு நாடுகள் ஆடும் தொடரில் பாகிஸ்தான் அணியால் கண்டிப்பாக இடம்பெற முடியாது. எனவே ரஷீத் லத்தீப் பொறாமையில் இதுபோன்று கருத்து தெரிவித்து இப்படி பேசுகிறார் கங்குலி செய்வது எல்லாமே சிறப்பாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement