எதிரணி 200 ரன்ஸ் அடிச்சாலும் பரவாயில்ல.. எங்களிடம் அந்த திறமை இருக்கு – ரஷீத் கான் அதிரடி கருத்து

Rashid
- Advertisement -

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள வேளையில் சி பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான் அணியானது நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூகினியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளோடு மோத இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உகாண்டா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பேசியுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் 200 ரன்கள் எதிரணி குவித்தாலும் அதனை எங்களால் வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : முன்பு நாங்கள் பேட்டிங்கில் தடுமாறி இருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் எங்களது பந்துவீச்சாளர்கள் அதீத உழைப்பை கொடுத்து வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் இப்போது எங்களது அணியின் பேட்ஸ்மேன்களும் நிறைய திறமையுடன் விளையாடி வருகின்றனர். தற்போதெல்லாம் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் 19 வயதுக்குட்பட்டார் அணியிலிருந்து வந்த இளம் வீரர்கள் தேசிய அணிக்காக வெகு விரைவாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அற்புதமான செயல்பாட்டை வழங்கி வருகிறார்கள்.

உலகில் எந்த மூளைக்கு சென்றாலும் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாகவே விளையாடுகின்றனர். அதனால் எந்த ஒரு ஆடுகளத்திலும் எங்களால் 200-க்கும் அதிகமான டார்கெட்டை சேஸிங் செய்ய முடியும் என்று கூறும் அளவிற்கு தற்போது எங்களுடைய பேட்டிங் பலமாக இருக்கிறது.

- Advertisement -

எந்த சூழ்நிலையில் இருந்தாலும் எங்களது அணியின் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடி வருகின்றனர். அதனால் நிச்சயம் இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். அதோடு எதிரணிக்கு நன்கு சவாலும் வழங்கியுள்ளோம்.

இதையும் படிங்க : கவுதம் கம்பீர் எந்த அளவுக்கு ஒரு சோம்பேறி தெரியுமா? சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த – தினேஷ் கார்த்திக்

இந்த முறை டி20 உலக கோப்பையில் நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே கரீபியின் பிரீமியர் லீக் தொடரில் எங்கள் அணியைச் சேர்ந்த சில வீரர்கள் இங்கு விளையாடி உள்ளதால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement