ஜடேஜாவுக்கு சொல்றத தான் உனக்கும் சொல்றேன் புரிஞ்சிக்கோ. ரஷீத் கானுக்கு அட்வைஸ் கொடுத்த தோனி – விவரம் இதோ

Rashid

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் உலக அளவில் பாப்புலரான ஒரு வீரர். அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்கள் அதாவது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல், பங்களாதேஷில் நடைபெறும் பிபிஎல், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸ் இல் நடக்கும் கரீபியன் லீக் போன்ற தொடர்களில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Rashid

இதன் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் ஓய்வு இருக்கும் ரஷீத் கான் சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக தனது கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

தோனியின் கீழ் விளையாடுவது எனது கனவு. ஏனெனில் அவருடைய தலைமையின் கீழ் விளையாடும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். ஒரு பந்து வீச்சாளராக தோனி போன்ற விக்கெட் கீப்பர் எவ்வளவு முக்கியமானவர் என்பது நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒருவரிடமிருந்து நான் பெரும் அறிவுரைகள் என் ஆட்டத்தை இன்னும் முன்னேற்ற உதவும் என்று தெரிவித்தார்.

Rashid

மேலும் ஏற்கனவே ஒரு போட்டியின்போது தோனி கூறிய அறிவுரையை ரஷீத் கான் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி முடிக்கும் போதும் நான் அவருடன் டிஸ்கஷன் செய்வேன். கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி முடித்த பின்னர் அவரிடம் பேசிய போது தோனி என்னிடம் : பீல்டிங் செய்யும்போது ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினார். ஏனெனில் தேவையில்லாத நேரங்களில் பந்தைக் கீழே விழுந்து பிடிப்பதால் காயம் ஏற்பட்டு விடும் என்று கூறினார்.

- Advertisement -

rashid 1

மேலும் நீ பீல்டிங் செய்யும்போது கேர் ஃபுல்லாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரே ஒரு ரஷீத் கான் தான் இருக்கிறார். அவரை தான் மக்கள் பார்க்க ஆசைப்படுகிறார்கள். காயம் அடைந்து விட்டால் என்ன ஆவது என்று என்னிடம் கூறினார். மேலும் ஜடேஜாவிடமும் அவர் அதையேதான் சொல்வாராம் அதனால் என்னை பீல்டிங் செய்யும் போது ஜாக்கிரதையாக காயமடையாமல் பீல்டிங் செய்ய வேண்டும் என்று தனக்கு அட்வைஸ் கொடுத்ததாக ரஷீத் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement