இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று இருந்த நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதுமட்டுமின்றி இந்த தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த போட்டியின் வெற்றிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஹார்டிக் பாண்டியா காரணமாக இருந்தார். நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 குவித்தது.
அடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி சிறப்பாக துவங்கியது. ராகுல் 30 ரன்களையும், தவான் 52 ரன்களை குவிக்க சிறப்பான துவக்கம் கண்டது. அதன்பிறகு சஞ்சு சாம்சன் 15 ரன்களும், விராட் கோலி 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து நல்ல ரன் குவிப்பை அளித்தனர். அதன்பிறகு முன்வரிசையில் விளையாடிய வீரர்கள் ஓரளவுக்கு கொடுத்தாலும் இறுதி நேரத்தில் வெற்றியை நெருங்க அதிரடி தேவைப்பட்டபோது.
அப்போது களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா சிறப்பாக விளையாடினார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டிய 22 பந்துகளில் 42 ரன்களில் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் அதிரடியாக ஹர்டிக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
அது மட்டுமன்றி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. முன்னணி வீரர்கள் பலரும் அவரை இணையத்தில் பாராட்டுகளை தெரிவித்து வர தற்போதைய ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹார்டிக் பாண்டியாவை வெகுவாக புகழ்ந்துள்ளார். இது குறித்து அவர் இட்ட பதிவில் :
Hardik pandya is one of the most calm cool and clean hitter of the ball top class @hardikpandya7 🙌🏻🙌🏻🙌🏻
— Rashid Khan (@rashidkhan_19) December 6, 2020
தற்போதைய கிரிக்கெட்டில் அமைதியாக இருந்தாலும் க்ளீனாக பந்தினை அடித்து ஆடுகிறார். அவரது பேட்டிங் டாப் கிளாஸ் என்று புகழ்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் முழுநேரமாக பேட்ஸ்மேனாக இடம்பெற்று விளையாடி வரும் பாண்டியா இறுதி கட்டத்தில் இறங்கி அடித்து நொறுக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.