- Advertisement -
ஐ.பி.எல்

ரஷீத் கானுக்கே இப்படி ஒரு நிலைமையா? நட்சத்திர வீரருக்கு முதல் முறையாக நேர்ந்த சோகம் – விவரம் இதோ

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியானது நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

முதல்முறையாக ரஷீத் கானுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் :

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 63 ரன்களையும், ஜாஸ் பட்லர் 39 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி : குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தாங்கள் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பெரும் பின்னடைவு சந்தித்திருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும், ஆப்கானிஸ்தான் வீரருமான ரஷீத் கான் 2 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

ஆனாலும் இந்த போட்டியில் அவர் எஞ்சியுள்ள இரண்டு ஓவர்களை வீசவில்லை. இப்படி ரஷீத் கான் ஐபிஎல் டி20 போட்டியில் நான்கு ஓவர்களை முழுவதுமாக வீசி முடிக்காதது இதுவே முதல் முறை. ஐபிஎல் தொடரில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் ஒரு போட்டியில் கூட அவர் நான்கு ஓவர்களை முழுவதுமாக வீசாமல் விட்டது கிடையாது.

இதையும் படிங்க : பாண்டியா என் நண்பர்.. ஆனாலும் இதுக்காக தான் முறைச்சேன்.. மும்பை கேப்டனுடன் மோதியது பற்றி சாய் கிசோர்

ஆனால் நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் அவருக்கு 2 ஓவர்களையும், இம்பேக்ட் பிளேயராக வந்த இஷாந்த் சர்மாவுக்கு 2 ஓவர்களையும் பிரித்துக் கொடுத்ததால் முதல் முறையாக ரஷீத் கானால் 4 ஓவர்களை பூர்த்தி செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -