ரன்வீர் சிங்குடன் இணைந்து ஜாலியாக கால்பந்து பயிற்சியை மேற்கொண்ட தல தோனி – எதற்கு தெரியுமா ?

Ranveer
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஓய்வு பெற்ற பின்னர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பங்கேற்ற தோனி சி.எஸ்.கே அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐ.பி.எல் தொடரானது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள தோனி மீண்டும் தற்போது மும்பை திரும்பி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கால்பந்து பயிற்சி மேற்கொள்ளும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதனை பகிர்ந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “எனது டார்லிங்”, “எனது அண்ணன்”, “எனது ஹீரோ” என்று பல கேப்ஷன்களை கொடுத்து தோனியுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தாடியுடன் காட்சியளிக்கும் தோனி சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் விருப்பமுள்ள தோனி அவ்வப்போது கால்பந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மேற்கொள்ளும் இந்த பயிற்சி ஏனெனில் ஆண்டுதோறும் இதுபோன்று ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்டம் நடத்தப்பட்டு அதில் திரட்டப்படும் தொகை முழுவதும் ஏதாவது ஒரு டிரஸ்ட்க்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கால்பந்தாட்டத்தில் பங்கேற்கவே தோனி பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement