நியூசி தொடரை தொடர்ந்து ரஞ்சி போட்டியிலும் வெளியேறிய புஜாரா. ஆனால் அவுட் ஆகாமல் வெளியேறியுள்ளார் – விவரம் இதோ

Pujara
- Advertisement -

ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டிக்கு செட்ஸ்வார் புஜரா அங்கம் வகிக்கும் சவூராஷ்டிரா அணியும் விருத்திமான் சகா, முகமது சமி ஆகியோர் அங்கம் வகிக்கும் மேற்குவங்க அணியும் முன்னேறினார்.

Pujara 1

- Advertisement -

இந்த போட்டியில் சவூராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் பிடித்து ஆடி வருகிறது. இந்திய அணிக்காக ஆடிய செட்டேஸ்வர் புஜாரா வழக்கம்போல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்திய அணிக்கு ஆடுவது போலவே மூன்றாம் இடத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக ஐந்தாவதாக களமிறங்கினார் புஜாரா . களம் இறங்கிய 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ரிட்டையர் ஹார்ட் ஆகி வெளியேறினார்.

pujara

இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள் அதற்கு காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இறுதிப்போட்டிக்கு ஆட வந்துள்ளார் புஜரா என தெரியவந்துள்ளது.

- Advertisement -

பின்னர் களத்தில் நிற்க முடியாததால் பாதியில் வெளியேறியுள்ளார் . இந்நிலையில் இன்று மீண்டும் பேட்டிங் பிடித்து வரும் சௌராஷ்டிரா அணி தற்போது வரை 306 ரன்கள் குவித்துள்ளது. 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வரும் அந்த அணிக்கு புஜாரா 167 பந்துகளுடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.

pujarasad

இந்நிலையில் புஜாராவின் இந்த ஆட்டம் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் புஜாராவின் நிலைமை குறித்தும் கருத்துக்களை தெரிவித்து வரும் ரசிகர்கள் அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement