மைதானத்தில் நுழைந்த பாம்பு. தாமதமான போட்டி – வைரலாகும் வீடியோ

Snake

ஆந்திரா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி துவங்குவதற்கு முன்பாக மைதானத்தில் பாம்பு புகுந்த விவகாரம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை இன்று துவங்கியது.

இந்த தொடரின் முதல் போட்டி இன்று விஜயவாடாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆந்திரா மற்றும் விதர்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பீல்டிங் செய்ய தயாரான போது திடீரென மைதானத்திற்குள் பாம்பு புகுந்தது. இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு இருந்தது. இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் தொடர்ந்து பாம்பை பணியாளர்கள் உதவியோடு வெளியேற்றிய பின்னர் போட்டியை தொடர்ந்தனர். பி.சி.சி.ஐ யின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.