கோலி என்னதான் கிரேட் பிளேயரா இருந்தாலும் இளம்வீரரான அவரை பாத்து கத்துக்கனும் – ரமீஸ் ராஜா கருத்து

Ramiz-raja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தற்போது டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதம் விளாசாமல் இருந்து வரும் கோலி இம்முறையாவது இந்த இங்கிலாந்து தொடரில் சதத்துடன் ரன் குவிப்பை துவங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

anderson 1

- Advertisement -

ஆண்டர்சன் வீசிய நல்ல லெந்த் டெலிவரியை கணிக்க முடியாத கோலி பேட்டின் விளிம்பில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரின் இந்த விக்கெட் வீழ்ச்சி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா “கோலி ராகுலிடம் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் பேட்டிங் செய்யும் பொழுது முறையான ஸ்டம்பில் நின்று பந்தினை கவர் செய்து விளையாடுகிறார். மேலும் அவருக்கு ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்றும் பந்து எங்கே வருகிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. கோலி போன்ற கிரேட் பிளேயர்கள் எந்த வயதில் இருந்தாலும் இதுபோன்று இளம் வீரர்களிடம் இருந்து சிறிய சிறிய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

rahul 1

அந்தவகையில் ராகுல் எவ்வாறு இலகுவாக விளையாடுகிறாரோ, அதனை கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகுல் முறையாக லைனில் நின்று பந்தினை கடைசிவரை பார்த்து விளையாடுகிறார். மேலும் பேட்டை மிக நெருக்கமாக கொண்டு சென்று முழுவதுமாக படும் படியும் அவர் விளையாடுகிறார்.

rahul

இதன் காரணமாகவே தற்போது அவரால் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாட முடிகிறது இது போன்ற சூழ்நிலைகளில் இளம் வீரர்கள் இவ்வாறு விளையாடுவது பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. விரைவில் இந்த தவறை திருத்தி கோலி நிச்சயம் ஒரு செட்டிலான இன்னிங்ஸ் விளையாடுவார் என்று தான் நம்புவதாக ரமீஸ் ராஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement