டெஸ்ட் போட்டிகளில் சச்சினை விட இவர் இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடினார் – ரமீஸ் ராஜா ஓபன் டாக்

Ramiz-Raja

ஒரு காலத்தில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், லட்சுமண் ஜாம்பவான்கள் இருந்தார்கள் இவர்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு இந்திய அணியையும் வெற்றி பெற வைத்து கொண்டிருந்தார்கள்.

dravid

இதில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கும் ராகுல் டிராவிட்டிற்க்கும் பெரிய போட்டிருக்கும். இதில் எப்போதும் ராகுல் டிராவிட் தன்னை தனித்தன்மை வாய்ந்தவனாக காட்டிக் கொள்வார்.

இந்நிலையில் சில நேரங்களில் சச்சினை விட ராகுல் டிராவிட் தான் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…

Dravid 1

இந்தியாவின் தடுப்பு சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் கடுமையான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடும் ஒரு பேட்ஸ்மேன் ஆவார் .நங்கூரம் பாய்ச்சியது போல் நின்று ஆடுகளத்தில் தடுப்பாட்டம் ஆடுவார்.

- Advertisement -

Dravid

அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கரை மிஞ்சி விடுவார் ராகுல் டிராவிட். இருந்தாலும் சச்சினை போன்ற இயற்கையாக ராகுல் டிராவிட்டுக்கு திறமை கிடையாது. அர்ப்பணிப்பு ,கடுமையான உழைப்பு போன்றவற்றின் மூலம் சிறந்த வீரராக மாறியிருக்கிறார் ராகுல் டிராவிட் என்று தெரிவித்துள்ளார் ரமீஷ் ராஜா.