டி20 கேப்டன் மட்டுமல்ல. இந்த பதவியையும் கோலி ராஜினாமா செய்ய வேண்டும் – சிறுவயது கோச் பேட்டி

rajkumar

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை திடீரென டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தான் டி20 வடிவ கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் பதவியை துறக்க உள்ளதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு பல்வேறு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் அதிக பணிச்சுமை காரணமாக தான் இந்த பணியில் இருந்து விலகுவதாகவும், அதனைத்தொடர்ந்து அணியில் தொடர்ச்சியாக பேட்ஸ்மேனாக செயல்படுவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த பதவி விலகல் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களையும் கூறி வந்த நிலையில் அவரது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மா விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளது குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐசிசி தொடர்களை வெல்லவில்லை என்பது மட்டுமே அவர்மீது குறையாக உள்ளது. அதனை தவிர்த்து பார்த்தால் இந்திய அணியின் மிகச்சிறப்பான கேப்டனாக அவர் திகழ்ந்துள்ளார்.

- Advertisement -

அது தவிர மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவரது சாதனைகள் மற்றும் அவர் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திய விதம் என அனைத்துமே அருமையான ஒன்று. நிச்சயம் அவர் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த பிளேயர் தான் என்று கூறியுள்ளார்.

Kohli-3

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் விலகியதை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணியின் கேப்டன்ஷிப் பதவியை கைவிட வேண்டும். அவர் அதனையும் ராஜினாமா செய்தால் நிச்சயம் அவரால் இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனத்தைச் செலுத்த முடியும். எனவே விரைவில் அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Kohli-1

அதுமட்டுமின்றி இந்த டி20 உலக கோப்பை தொடருடன் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் நிச்சயம் இந்த தொடரில் அவர் தனது அபாரமான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்துவார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement